News
சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் சில தீர்மானங்களால் தாம் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் சில தீர்மானங்கள் குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வென்ற இடங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய நபர்கள் தொடர்பான முந்தைய ஒப்பந்தங்கள் நேற்றுடன் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக சதவீத வாக்குகளைப் பெற்றவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களில் ஆசனங்களை வழங்க கட்சி முன்னர் தீர்மானிக்கப் பட்டிருந்ததாகவும் தற்பொழுது அந்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தால் கட்சியின் பல அமைப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்றும் ரோஹிணி குமாரி விஜேரத்ன கூறினார்.

