News
கம்பளை அம்புலுவாவ மலைக்கு தவறான பாதையில் ஏறிய நபர், உடலில் கல் வி*ழுந்து உயிரிழப்பு
தெஹியோவிட்டவிலிருந்து கம்பளைக்கு வந்து அம்புலுவாவ மலையில் தவறான பாதையில் ஏறச் சென்ற நபரொருவர் உடலில் கல் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நான்கு பேர் கொண்ட குழுவொன்று மலை ஏற சென்றதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹியோவிட்ட முருத்தெட்டுவ பிரதேசத்தில் கார்டி சமரதுங்கலகேயைச் சேர்ந்த தமிந்த சமரதுங்க என்ற முப்பத்தேழு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
விசாரணையில், மனைவியிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய அவர், நண்பர்கள் நான்கு பேருடன் இந்த சுற்றுலா வந்தது தெரியவந்துள்ளது.