எமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரே வெற்றிபெறுவார் – எதிர்வரும் 14 ஆம் திகதி நாம் யாரை ஆதரிக்க போகிறோம் என்பதையும் அறிவிப்போம்
தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரே வெற்றிபெறுவார் எனத் தெரிவித்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் தனது கட்சி யாரை ஆதரிக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் எனவும் கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாரை ஆதரிப்பது என்பது குறித்து புத்தளம் மாவட்ட ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று (10) இரவு புத்தளம் தில்லையடி பகுதியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாகார், எஸ்.ஏ.எஹியா, புத்தளம் நகர சபை முன்னாள் பிரதி தலைவர் ஏ.ஓ.அலிகான் உட்பட, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது சந்திப்பில் கலந்துகொண்ட ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்