News

ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்லும் சீன டாங்கர்களை அமெரிக்கா தடுக்கும் – ஈரானில் சீனாவுக்கு எண்ணெய் பெற விடமாட்டோம் ; அமெரிக்கா

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்லும் சீன டாங்கர்களை அமெரிக்கா தடுக்கும் என்று அமெரிக்க நிதியமைச்சின் செயலாளர் ஸ்காட் பெசென்ட்,கூறியுள்ளார்.


“அவர்களால் அந்த எண்ணெயைப் பெற முடியாது. அவர்களால் எண்ணெய் பெற முடியும். ஆனால் ஈரானிய எண்ணெயை அல்ல,” என்று வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களிடம் பெசென்ட் கூறினார்.


ஈரானின் எண்ணெயை பெருமளவில் வாங்கும் சீனாவை அவர் விமர்சித்தார், எண்ணெய் விநியோகத்தை பதுக்கி வைப்பது மற்றும் சில பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட செயல்களால் சீனா ஒரு “நம்பகத்தன்மையற்ற உலகளாவிய பங்காளியாக” இருப்பதாக அவர் கூறினார்.

இது குறித்து சீன அதிகாரிகளுடன் தான் பேசியுள்ளதாகக் கூறிய அவர், இந்த சர்ச்சை மே மாத பாதியில் பெய்ஜிங்கிற்குச் செல்லவிருக்கும் டிரம்பின் திட்டத்தைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.


“இந்த பயணத்திற்கான செய்தி ‘ஸ்திரத்தன்மை’ என்று நான் நினைக்கிறேன். கடந்த கோடையில் இருந்து உறவில் பெரும் ஸ்திரத்தன்மை உள்ளது; அது மேலிடத்திலிருந்து உருவானது,” என்று பெசென்ட் கூறினார். “தொடர்புதான் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.”

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button