News
இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு அவசியம் – ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்
இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு அவசியம் என்பதை சகல ஜனாதிபதி வேட்பாளர்களிடம் வலியுருத்துவதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
சுருக்கமாக சொன்னால் இதுவே தமது அரசியல் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார். இதைத்தான் தங்களோடு பேசவரும் அனைத்து வேட்பாளர்களிடமும் சொல்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.இதற்கு ஆதரவளிக்க எவரும் முன்வந்தால் அதற்கு ஆதரவளிக்க முடியும் என மத்திய குழு கூட்டத்தில் சொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.