ரணில் , மஹிந்த , நாமல் , அநுர குமார என சகலரினதும் ஒரே இலக்கு சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதே ஆகும் ; நளின் பண்டார
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுகின்றார் என குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை வீழ்த்துவதே நால்வரின் ஒரே இலக்காகும் என்றார்.
ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டியில் வைத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன். நான் தான் தற்போது தொழில் அமைச்சர் கூறி மீண்டும் தோட்ட மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
VFS கொடுக்கல் வாங்கல் மோசடியை அமைச்சர் டிரான் அலஸ் சுத்தப்படுத்த முயற்சிக்கிறார். செப்டம்பர் 21 சஜித் பிரேமதாசவின் வெற்றியை தொடர்ந்து முதலாவது நாம் இந்த VFS கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்தே விசாரணை நடத்துவோம் என்றார்.
ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, அநுர குமார என சகலரினதும் ஒரே இலக்கு சஜித் பிரேமதாசவே. சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். அதன் ஒரு பகுதியாகவே ரணில் விக்ரமசிங்கவின் ஒப்பந்தம் ஒன்றின் பிரகாரமே சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் என்றார்.