ஓட்டமாவடி ஐக்கிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினரை தகுதி நீக்கக் கோரி றிட் மனு தாக்கல்…

ஐக்கிய மக்கள் சக்தியின் கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட எம்.ரீ.எம்.அன்வர் அவர்களின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு கோரி மனுதாரரான சட்டத்தரணி ஹபீப் றிபானினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தடையீட்டு எழுத்தாணை மனுவானது இன்று மனுதாரரினால் நீதியரசர் கே.எம்.ஜீ.எச். குலதூங்க முன்னிலையில் ஆற்றுப்படுத்தப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினராக தேர்வாகும் நபர் ஒருவர் குறித்த உள்ளூராட்சி மன்றத்தின் எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும் என தேர்தல் சட்டம் தேவைப்படுத்தும் தகுதியினை எதிராளி பூரணப்படுத்தவில்லை எனும் மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம் எதிர்தரப்பினருக்கு அழைப்பு கட்டளை அனுப்புமாறு கட்டளையிட்டது. எதிர்த்தரப்பினரால் நீதிமன்ற நியாயாதிக்கம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முகத்தோற்ற ஆட்சேபனையை நிராகரித்து விடயத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயப்பொருள் உள்ளதாக கருதி இவ்வழக்கினை எதிர்வரும் ஜூலை 14ம் திகதி இடைக்கால கட்டளைக்கட்டளையை ஆக்குவதற்கான விசாரணைக்காக நியமித்துள்ளது. மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, மற்றும் சட்டத்தணி சிபான் மஹ்ரூப், சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் மன்றில் தோன்றி வாதங்களை முன்வைத்தனர்.

