ஈரான் நாடு இருக்க வேண்டும் என்றால், இனிமேல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்றால், இனிமேல் அழிவுகள் ஏற்படக்கூடாது என்று கருதினால் அணு சக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் அணு சக்தி தளங்கள், இராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது,
அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. சில தலைவர்கள் (இராணுவ தளபதிகள்) மிகப்பெரிய வீரர்களை போன்று பேசினர். அவர்கள் இன்று உயிரோடு இல்லை.
ஈரான் ராஜ்ஜியம் நிலைத்திருக்க வேண்டும். இனிமேல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது. இனிமேல் அழிவுகள் ஏற்படக்கூடாது என்று கருதினால் அணு சக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

