ஈரானின் தாக்குதல்கள் காரணமாக எனது மகனின் திருமணத்தையே ரத்து செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது என பெஞ்சமின் நெதன்யாகு வேதனையுடன் தெரிவித்தார்

ஈரானிய ஏவுகணை தாக்குதலால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம் – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இன்று காலை சோரோகா மருத்துவமனையில் ஈரானிய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,
“ஈரானிய ஏவுகணை தாக்குதல்களால் அனைத்து இஸ்ரேலியர்களும் விலை கொடுத்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயரத்தில் ஆழ்ந்த குடும்பங்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தப் போரின் விளைவுகள் தனது குடும்பத்தையும் பாதித்ததாக நெதன்யாகு கூறினார்.
“எனது மகன் அவ்னர், ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இரண்டாவது முறையாக தனது திருமணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது.
இது அவனுக்கும், அவனது வருங்கால மனைவிக்கும், எங்கள் குடும்பத்திற்கும் பெரும் தனிப்பட்ட இழப்பாகும்” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

