News

சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ஆகஸ்ட் 16 ஆம் திகதி குருநாகல் சத்தியவாதி திடலில்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ஆகஸ்ட் 16 ஆம் திகதி குருநாகல் சத்தியவாதி திடலில்.

நாடளாவிய ரீதியாக 100 தேர்தல் பிரசார கூட்டங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 16 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ஆகஸ்ட் 16 ஆம் திகதி குருநாகல் சத்தியவாதி திடலில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நாடளாவிய ரீதியில் 100 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 400 நடுத்தர அளவிலான கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் ஊடாக வாக்காளர் மட்ட நிலைய மட்டத்திலான கலந்துரையாடல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலுடன் இணைந்து பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் வேட்புமனு கையளித்ததன் பின்னர் மக்களிடம் முன்வைக்க எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் 27 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. அத்துடன், தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கு ஐக்கிய புத்திஜீவிகள் ஒன்றியத்தினர் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்களின் பங்களிப்பும் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வேட்புமனுக்களை சமர்ப்பித்து இன்னும் சில நாட்களில் நாட்டை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. தேர்தல் கொள்கையின் விஞ்ஞாபனத்தை அறிவிக்கும் போது பல விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recent Articles

Back to top button