News
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை

காலி – அக்மீமன பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்மீமன, தலகஹாவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் (SP) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

