News

வீடொன்றினுள் சில இரசாயனங்களை கலக்கும்போது, நச்சுப் புகை கசிந்ததால் இருவர் உயிரிழப்பு

மாலம்பே, கஹந்தோட்டை வீதி, ஜெயந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றினுள் விஷ வாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாலம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

65 மற்றும் 43 வயதுடைய இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த இருவர் சில இரசாயனங்களை கலக்கும்போது நச்சுப் புகை கசிந்ததாலேயே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மாலம்பே பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீட்டில் உள்ள இரசாயனப் பொருட்களை அடையாளம் காண முடியவில்லை எனவும், அந்த நச்சு வாயு இன்னும் வீட்டில் இருப்பதால் விசாரணையை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button