News

அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறந்த, ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்க சுகாதார அமைச்சு விசேட திட்டம்

அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறந்த, சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டத்தைத் ஆரம்பிப்பது குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.



இது தொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.



மகரகம புற்று நோய் வைத்தியசாலையை மையமாகக் கொண்ட இந்த விசேட திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கான முன்னோடித் திட்டத்தைத் தொடங்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சும் தீர்மானித்துள்ளது.



அதன்படி, வைத்தியசாலையின் பணிப்பாளர், நிர்வாகம் மற்றும் தொழில்சார் அதிகாரிகள், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள், தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் வைத்தியர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.



இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர்,



அரசு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக சுகாதார அமைச்சு ஆண்டுதோறும் பெரும் தொகையை செலவிடுவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்தப் பணம் நியாயமாகச் செலவிடப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.



வைத்தியசாலையில் வழங்கும் உணவு நோயாளிகளுக்கு தரமானதாக உள்ளதா என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்பதுடன் வைத்தியசாலையில் வழங்கப்படும் தற்போதைய உணவு மற்றும் நோயாளிக்கு வழங்கப்படும் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.



வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு சுவையான, சத்தான உணவுகளை வழங்குவதற்கான இந்த திட்டம், எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் செயல்படுத்தப்படும்.



ஒரே நேரத்தில் 2000 பேருக்கு உணவு தயாரிக்கும் வசதிகளுடன் கூடிய நவீன சமையலறை வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அதற்கு போதுமான ஊழியர்கள் இல்லை என்பது இங்கு தெரியவந்தது.



அதேபோல், இந்த உணவை நவீன முறையில் தயாரித்து வழங்க ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியமும் இங்கு தெரிவிக்கப்பட்டது.



இந்தக் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர்களான சுனில் கலகம மற்றும் சாலிந்த பண்டார சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேல குணவர்தன, மஹரகம புற்று நோய் மருத்துவமனையின் பணிப்பாளர் அருண ஜெயசேகர அத்துடன் இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் விக்ரமசேகர, வைத்தியர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கலந்து கொண்டனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker