News
அனுரகுமார அல்லது சஜித்தே வெற்றி பெறுவார்கள் – யார் வெற்றி பெற்றாலும் பிரச்சினை இல்லை என மற்றும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரே தெரிவிப்பு
இலங்கையின் தலைமைத்துவம் கண்டிப்பாக மாற வேண்டும் எனவும், இம்முறையும் மக்கள் தவறிழைத்தால் மிகவும் சோகமான சூழலுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் எனவும் Sri Lanka Labour Party யின் ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எஸ். பி. லியனகே, வேட்புமனுக்களை கையளித்த பின்னர் தெரிவித்தார்.
இலங்கை மக்கள் 75 வருடங்களாக ஊழல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளதுடன் இந்த தேர்தலில் ஊழல்வாதிகள் அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனுரகுமார அல்லது சஜித் வெற்றி பெறுவார்கள் என்றும், யார் வெற்றி பெற்றாலும் பிரச்சினை இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.