News
பொத்துவிலில் இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் வழிபாட்டு இல்லத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசைக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்குமாறு அரசைக் கோரி கண்டன ஆர்ப்பாட்டமொன்று அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களால் திங்கட்கிழமை (21) அன்று பிரதேச சபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு திங்கட்கிழமை (21) அன்று தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றது. இவ்விடயம் தொடர்பில் சகல உறுப்பினர்களாலும் பேசப்பட்டதுடன் அது தொடர்பான கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு சபை முடிவில் கண்டன ஆர்ப்பாட்டமும் செய்வதன்றும் முடிவு செய்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அபு அலா, எஸ்.எம்.அறூஸ்

