சட்டவிரோத வாகனத்தை விற்பனை செய்த அபேகுணவர்தனவின் மகள் மாயம் – காவல்துறையினரால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ள நிலையில் வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாத்துகம நீதவான் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் மீது வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வலன அடிப்படை குற்றத் தடுப்பு பிரிவின் கோரிக்கையை அடுத்து இந்த நீதிமன்ற உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
சமகி ஜன பல வேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவின் மகனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் தொடர்பான விசாரணைகளை அடுத்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்ப விசாரணைகளில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அந்த SUV வாகனத்தை ரோஹித்த அபேகுணவர்தனவின் மகள், ஜகத் வித்தானவின் மகனுக்கு விற்பனை செய்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
பல முயற்சிகளுக்கு மேலாகவும், விசாரணைக்காக ரோஹித்த அபேகுணவர்தனவின் மகளை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

