News
மகரகம அபேக்க்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு infusion pumps and one multi-para monitor இயந்திரங்களை அன்பளிப்பு செய்த கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லுாரி பழைய மாணவிகள்

(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு 4 முஸ்லிம் மகளிர் கல்லுாரி பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மகரகம அபேக்க்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு இரண்டு infusion pumps and one multi-para monitor இயந்திரங்களை வைத்தியாசலைக்கு அன்பளிப்பு செய்தனர். பழைய மாணவிகளது கிடுகு திட்டத்தின் கீழ் மற்றும் நலன் விரும்பிகளினாலும் சேகரிக்கப்பட்ட நிதியும் கையளிக்கபப்ட்டது.
இத்திட்டத்தினை பழைய மாணவிகள்அமைப்பின் தலைவியும் அதிபருமான திருமதி நஸ்ரியா முனாஸ், பழைய மாணவிகள் சங்கத்தின் உப தலைவியுமான பெரோசா முசம்மில் மற்றும் இத் திட்டத்தின் உறுப்பிணர்கள் திருமதி ராசியா உவைம், திருமதி சமானி நாசீம் ஆகியோர்களுடன் ஏனைய பழைய மாணவிகள் உறுப்பிணர்களும் இணைந்து வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி டொக்டர் ரெஸான் அமரதுங்க, விஷேட தாதி அதிகாரி திருமதி குருசிங்கவிடம் கையளிததனர்.

