ஈஸ்டர் தாக்குதல் பற்றி தெரிந்திருந்தும் மறைத்தார்களா என ரணில், மைத்திரிப்பால மற்றும் அமைச்சர்ளை விசாரிக்கமாறு முபாரக் மவலவி அரசிடம் கோரிக்கை

பற்றி தெரிந்திருந்தும் அதை மறைத்தமைக்காக பிரதி பொலிஸ் மாஅதிபர் கைது செய்யப்பட்டமை ஜனாதிபதி அனுரகுமார அரசின் மிகச்சிறந்த நடவடிக்கையாகும். அதுபோல் அவ்வேளை அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களும் தெரிந்தும் மறைத்தார்களா என்ற விசாரணை தேவை என ஐக்கிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது.
ஈஸ்டர் தாக்குதல் பற்றி கடந்த ஜனாதிபதிகள் முறையான விசாரணைகளை நடத்தவில்லை என்பதை நாடு அறியும். அதிலும் விடயத்தை திசைதிருப்ப நல்லாட்சி அரசு இதன் பின்னணியில் முஸ்லிம்களே இருப்பது போலவும் தவ்ஹீத் கொள்கையின் மீதும் குற்றம் சாட்டி திசை திருப்பியது.
அத்துடன் முஸ்லிம் பெண்களின் அபாயா ஆடை, முந்தானைக்கு தடை, பள்ளிவாயல்கள் சிலவற்றுக்கு தடை என விடயத்தை திட்டமிட்டு திசைதிருப்பியதை அப்போதே எமது கட்சி கண்டித்தது. இத்தனைக்கும் அந்த ஆட்சியில் பல முஸ்லிம் அமைச்சர்களும் இருந்தனர். அவர்கள் இது பற்றி அறியவில்லையா அல்லது நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாத மடையர்களாக இருந்தார்களா என்ற கேள்விகளுக்கும் பதில் தேவை.
தாக்குதல் நடக்கப்போகிறது என தன் தந்தை கூறியதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவும் கூறியிருந்ததன் மூலம் அமைச்சரவைக்குள் இது விடயம் தாக்குதலுக்கு முன்பே கசிந்திருக்கிறது என்பதை புரியலாம்.
ஆகவே தற்போதைய அரசாங்கம் இது விடயத்தில் உண்மையை கண்டறிய முணைப்புடன் செயல்படுவதை ஐக்கிய காங்கிரஸ் பாராட்டும் அதே வேளை நல்லாட்சியின் சகல அமைச்சர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறது

