News
நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30 சதவீதம் குறைந்தது.

நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய பெட்ரோல் நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சார உற்பத்திக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

