News
இந்த நாட்டிற்குப் பொருத்தமான பொருளாதார, சமூக மாற்றங்களைக் கொண்டுவர எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவுள்ளது ; நாமல்
நாட்டிற்குப் பொருத்தமான பொருளாதார, சமூக மாற்றங்களைக் கொண்டுவர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியடையும் அரசியல் கட்சியாகும்.
தொழில் வாய்ப்பு, கைத்தொழிலைப் பெருக்கி நாட்டில் உள்ள அனைவரையும் பாதுகாக்க முடியுமான பரந்த கூட்டணியாக எமது கட்சி முன்னிலையாகிறது.
எமது கட்சிக்குள் மக்கள் மாறவில்லை மக்களின் பிரதிநிதிகளே மாறுகின்றனர்.
நாம் எமது நோக்கத்தை மக்களிடம் முன்வைப்போம்.
மக்களே அவர்களது முடிவுகளை எடுப்பர் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.