News

பாரிய அளவிலான 14 லட்சம் ரூபாய் பெறுமதியான 44 தொலைத்தொடர்பு கோபுர பெட்டறிரிகளை திருடி எடுத்து சென்ற இருவர் சிக்கினர். #மட்டக்களப்பு, அம்பாறை,  மாவட்டங்கள்.

ரீ.எல்.ஜவ்பர்கான்

பாரிய அளவிலான 44 தொலைத்தொடர்பு கோபுர பெட்டறிரிகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சுக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்கா தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார் கைப்பற்றப்பட்டுள்ள பேட்டரி ஒன்றின் பெறுமதி சுமார் 30,000 என தெரிய வருகிறது .

இதன்படி சுமார் 14 லட்சம் ரூபாய் பெறுமதியான பெற்றரிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன பெரியபோரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து திருடப்பட்ட 24 பெற்றரிகளும் சம்மாந்துறை தொலைதொடர்பு கோபுரங்களிலிருந்து திருடப்பட்ட 20 பெற்றரிகளும் கிடைக்கப் பற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டுள்ளன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள பெற்றரிகளும் குறித்த சந்தேக நபர்களும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார் .

இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button