News
கிண்ணியா பிரதான வீதியில் இருந்த போக்குவரத்துக்கு தடையான வியாபார பொருட்கள், தளபாடங்கள் அகற்றப்பட்டன.

ஹஸ்பர் ஏ.எச்_
கிண்ணியா பிரதான வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வியாபாரப் பொருட்கள் அனைத்தும் 31.07.2025 ம் திகதி நகர சபையினால் கைப்பற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குறித்த நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
பிரதான வீதியில் வியாபாரம் செய்கின்ற வர்த்தகர்களுக்கு கடிதங்கள் மூலமாகவும், தவிசாளர் தலைமையில் நேரடியாகவும் சென்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும் அதனையும் மீறி மீண்டும் அதே நடவடிக்கையை தொடர்ந்தவர்களுடைய பொருட்களே நகர சபையால் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நகர சபை செயலாளர் அனீஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
—
Hasfar A Haleem BSW (Hons)
Journalist

