News

கிண்ணியாவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவ போவதாக பாகிஸ்தான்  உறுதிமொழி!



இர்ஷாத் இமாமுதீன்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் உடன்   Serendip foundation இன் பணிப்பாளர் ஜமால்தீன் அமானுள்ளா சந்தித்து கிண்ணியா எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்தார்.


இச்சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (3) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின்போது திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்துவதற்காக தன்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தூதுவர் உறுதிமொழி வழங்கினார்.

இந்நிகழ்வில் Serendip foundation இன் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஜமால்தீன் அன்வருள்ளா மற்றும் விவசாய உத்தியோகத்தர் முகமட் நிஹாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Serendip foundation முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மர்ரஹூம் ஜமால்தீன் ஆசிரியரினால் உறுவாக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்குபல்வேறு நலத்திட்டங்களை 25 வருடமாக முன்னெடுத்து வருகின்றது. தனது தந்தை விட்டுச் சென்ற பணியை தனயன் முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button