
(ரிஹ்மி ஹக்கீம்)
நாடு முழுவதும் 100 புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்திலுள்ள புகையிரத நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “புகையிரத குடும்பம்” வேலைத்திட்டம் நேற்று முன்தினம் (02) வெயாங்கொடை புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
புகையிரத நிலையத்தை சரியான முறையில் நிர்வகித்து அங்கு பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பான நிலையை உருவாக்குவதற்காக “புகையிரத குடும்பம்” வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேற்படி ஆரம்ப நிகழ்வில் வெயாங்கொடை புகையிரத நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான குழு ஒன்றும் இதன்போது உருவாக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ருவன் மாபாலகம (பா.உ.), அத்தனகல்ல பிரதேச சபை தவிசாளர் தர்சன விஜேசிங்க, உப தவிசாளர் சந்திமால் விஜேசிங்க, வெயாங்கொடை புகையிரத நிலைய அதிபர் கீர்த்தி திசாநாயக்க உள்ளிட்ட புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள், வெயாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கலாநிதி கால்லே தம்மின்த தேரர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

