News
ரணிலுக்கு ஆதரவளிக்கும் 34 கட்சிகள் ஒப்பந்தம் கைச்சாத்து
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இணைந்து ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
‘இயலும் ஶ்ரீ லங்கா’ புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (16) கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மற்றும் கட்சிகள் இணைந்து முற்பகல் 10.06 மணி சுப நேரத்தில் அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
இம்மாநாட்டில் கையெழுத்திட்ட 34 அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவுமாகுமென, ‘இயலும் ஶ்ரீ லங்கா’ மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.