காணி ஒன்றை அடமானமாக வைத்து 225 மில்லியன் ரூபாவை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல், காணியை கையகப்படுத்த வரும் வங்கி அதிகாரிகளை குண்டர்கள் வைத்து விரட்டியடிக்கும் ஐ.தே.க பிரமுகர்

(அஷ்ரப் ஏ சமத்)
முன்னாள் அமைச்சர் அம்பாறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே தேசிய அபிவிருத்தி வங்கியில் அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 2013ல் 225 மில்லியன் ரூபாவை கடனாக எடுத்து இதுவரை செலுத்த வில்லை……..
அதற்கு அவரது தலத்து ஓயா வில் உள்ள அவருக்குரிய காணி ஒன்றை அடமானம் வைத்து இக் கடன் பெற்றுள்ளார்.
நேற்று 11ஆம் திகதி தேசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் வங்கியில் அடமானம் வைத்த தலத்து ஓயா என்ற காணியை ஏலத்தில் விற்று வங்கிக்குரிய நிதியை பெற முற்பட்ட போது முன்னாள் அமைச்சர் அவரது ஆட்களும் அக் காணிக்குள் வந்து அச்சுறுத்தியதாக வங்கி முகாமையாளர் தலாத்துஓயா பொலிஸில் முறையிட்டுள்ளனர் மேற்படி விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தலத்து ஓயா மாளிகா எனும் இடத்தில் 20 ஏக்கர் காணியை வங்கியில் 2013 காலப்பகுதியில் அமைச்சராகவும் ஜ.தே.கட்சியின் அமைப்பாளராக இருந்த காலத்திலேயே இக்கடன் 225 மில்லியன் பெற்றுள்ளதாக வங்கியின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நேற்று 11ஆம் திகதி காலை 11 மணியளவில் வங்கியில் அங்கீகாரம் பெற்ற சொத்துக்களை ஏலத்தில் விற்கும் கம்பெனியின் அதிகாரிகள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
கடந்த 12 வருடங்களாக பெற்ற கடனைச் திரும்பச் செலுத்தியத் தவறியிமையினாலேயே அடமானம் வைத்த சொத்தினை ஏலத்தில் விடுவதற் உரிய ஒப்பந்தம் படி வங்கி செயற்பட்டதாக தெரிவித்துள்ளது.
(தினமின 12ஆம் திகதிய முதல் பக்க தலைப்புச் செய்தி )



