News

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்திருந்த இளம் தம்பதி,  சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் கைது

சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இளம் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் குறித்த தம்பதியர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை வில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அநுராதபுரத்திலுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துக் குறித்த போதைப்பொருட்களை விநியோகம் செய்ய சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியினரை ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button