வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்தும் தமிழ் கூட்டமைப்பின் அழைப்புக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கட்டுப்பட கூடாது என ஐக்கிய காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.

எதிர் வரும் திங்கட்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடததும் தமிழ் கூட்டமைப்பின் அழைப்புக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கட்டுப்பட கூடாது என ஐக்கிய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
தமிழ் கூட்டமைப்புக்கு தேவை அடிக்கடி மக்களை அரசுகளுக்கு எதிராக கிளர்ந்தெழச்செய்து அதன் சூட்டில் இவர்கள் குளிர் காய வேண்டும் என்பதுதான் .
இத்தகைய ஹர்த்தாலால் அதிகம் பாதிக்கப்படப்போவது அன்றாடம் உழைத்து உண்ணும் பொது மக்கள்தான்.
ஹர்த்தால் நடத்த வேண்டும் என்ற தேவை தமிழ் கூட்டமைப்புக்கு இருக்குமாயின் வட மாகாணத்தில் நடத்திக்கொள்ளட்டும். பெரும்பான்மை முஸ்லிம்களை கொண்ட கிழக்கையும் சேர்த்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடும் உரிமை தமிழ் கூட்டமைப்புக்கு இல்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தை சேராதவர் என்பதால் கிழக்கில் ஹர்த்தாலுக்கு அவர் ஆதரவு கொடுப்பதன் மூலம் அவருக்கோ அவரின் உறவினர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் கண்டியிலும் கொழும்பிலும் உல்லாசமாக சொகுசாக வாழ்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலும் ஏழை விவசாயிகள், கடற்றொழிலாளர்களை கொண்ட கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு நாள் உழைப்பு நஷ்டம் என்பது சாதாரண விடயமல்ல. ரவூப் ஹக்கீம் இதற்கு ஆதரவளிப்பதன் மூலம் அமைச்சு பதவி இனி கிடைக்காது என்ற ஏமாற்றத்தில் சித்தசுயாதீனமற்ற உளறலாகும்.
ஆகவே இந்த ஹர்த்தாலுக்கு கிழக்கு முஸ்லிம்கள் எவ்வகையிலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என ஐக்கிய காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது.

