News

வீதியில் கிடந்த மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின்கள் பொலிஸாரால் மீட்பு

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து துப்பாக்கிகள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் கிடந்த பொதி ஒன்றை சோதனையிட்ட போது இந்த துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button