பாராளுமன்ற தேர்தலில் நடந்த சிரமதானத்தால் நாங்கள் வீட்டுக்கு சென்றோம்… ஆனால் இன்று முழு நாடும் பைத்தியக்கார ஆஸ்பத்திரி போல் உள்ளது ; முன்னாள் மொட்டு M P டி. வீரசிங்க தெரிவிப்பு

கடந்த தேர்தல் காலத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிரமதானத்தால், தனக்கு வீட்டிற்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி. வீரசிங்க தெரிவித்தார்.
“அம்பாறையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியாது. ஏனென்றால் அவர்கள் கிராமங்களுக்கு வரவில்லை, அவர்களால் வரவும் முடியாது. இப்போது நிலைமை பைத்தியக்கார ஆஸ்பத்திரி போல உள்ளது.
இந்த அரசின் அமைச்சர்களால் கிராமங்களுக்கு செல்ல முடியாது. விவசாய அமைச்சர் ஒரு கிராமத்திற்கு சென்றபோது, மக்கள் அவரை அடித்து விரட்டினர். திருகோணமலையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை மக்கள் அடித்து விரட்ட முயன்றனர்.
பொய்கள் சொல்லி இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் இன்று மக்கள் இந்த அரசாங்கத்தை நிராகரிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர்,” என்று அவர் கூறினார்.
அம்பாறையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது டி. வீரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

