ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலம் மக்களின் இறைமையை மீறுவதாக குற்றம்சாட்டி இருவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, வெயாங்கொடையைச் சேர்ந்த ஹரிந்திரரத்ன பனகல மற்றும் பன்னிபிட்டியவைச் சேர்ந்த பிரேமசிறி விஜேசேகர ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சட்டமா அதிபர் இம்மனுக்களின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பின் அதிகார பகிர்வு, இறையாண்மை மற்றும் மக்களின் இறைமையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 1, 3, 4 மற்றும் 12(1) பிரிவுகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், சட்டமூலத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வசன வாக்கெடுப்பு தேவை என உயர் நீதிமன்றத்திடம் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவும் இச்சட்டமூலத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது


பூனையின் கையைப்பிடித்து அடுப்பில் போட்டு பலாக் கொட்டையை எடுக்கும் இந்த முயற்சி வெறும் கால நேர வீண் மட்டுமன்றி வீணாக பணச் செலவுமாகும.