News
‘கமாண்டோ கவிஷ்க குமார’வைக் கொலை செய்வதற்காக சிறைச்சாலைக்குள் சயனைட் குப்பியை கொண்டுவந்த கும்பல்.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் நடவடிக்கையின் போது, சயனைட் (cyanide) குப்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சயனைட் குப்பி,போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் உதவியாளரான தரிந்து மதுசங்கவிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ‘கமாண்டோ கவிஷ்க குமார’வைக் கொலை செய்வதற்காக சிறைச்சாலைக்குள் சயனைட் கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது



