News

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தீப்பிடித்து எரிந்த லொரியில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஏறி ஒட்டிச் சென்று பலரின் உயிரையும் பெரும் சேதத்தையும் தடுத்த பஹத் அல் தல்தாஹிக்கு சவூதி அரேபிய அரசின் அதியுயர் விருதும் பத்து லட்சம் ரியாலும் வழங்க உத்தரவு

By : Razana Manaf

பஹத் அல் தல்தாஹி..

கடந்த வாரம் ரியாத்தில் உள்ள அல் தவாத்மி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வைத்து கால் நடை தீவனங்கள் ஏற்றிவந்த லொறி ஒன்றின் பின்பக்கம் தீப்பிடித்து தீவனங்கள் எரிந்து கொண்டிருந்தது. அந்த காணொளி சமூகவலைத்தளங்களிலும் வைரலானது.

லொறியை செலுத்தி வந்த சாரதியினால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்கு போகும் வழியில் எரிபொருள் நிரப்ப அங்கு வந்த பஹத் இந்த காட்சியை கண்டு நிலமையின் மோசமான விளைவை உணர்ந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வாகனத்திற்குள் ஏறி அதை கொண்டு சென்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து தொலைவில் போட்டுவிட்டு தப்பிவிட்டார்.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலையம் பாதுகாக்கப்பட்டது மட்டுமின்றி பல மனித உயிர்களும், உடமைகளும், வாகனங்களும் பாதுகாக்கப்பட்டது. சினிமாவில் மட்டுமே காணக்கூடிய ஒரு நிகழ்வை நேரில் பார்க்க கிடைத்ததினால் மக்களுக்கும் மகிழ்ச்சி.

இந்த சம்பவத்தில் பஹத் சிறு சிறு தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவசிகிச்சை பெற்றுவருகிறார்.

உயிர்களை காப்பாற்றுவதில் அவர் காட்டிய துணிச்சலையும், வீரத்தையும், அர்ப்பணிப்பு மிக்க மனிதநேய செயலையும் பாராட்டி சவூதி அரேபிய அரசின் மிக உயர்ந்த விருதான அப்துல் அஸீஸ் மெடலும் பணப்பரிசாக பத்து லட்சம் ரியாலும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button