நாமலை தேர்தலில் களமிறக்கியது சிறந்த முடிவு.
ராஜபக்ச குடும்பத்தின் மீதுள்ள ஊழல், மோசடிக் குற்றங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேதான் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன கட்சியையும் நாசமாக்கி விட்டார்.
பொதுஜன பெரமுன கட்சியைத் தற்பொழுது காப்பாற்றிக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ தன் மகனை ஜனாதிபதிப் போட்டியில் களமிறக்கியுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியைப் பாதுகாப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
களுத்துறை பண்டாரகம நகரில் இன்று சனிக்கிழமை (17) இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது தேர்தல் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
அரகலய போராட்டத்தின் பின்னர் ராஜபசாக்கள் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் குறைகளை மற்றும் தவறுகளைத் தவிர்ப்பதற்காக “நாட்டின் தலைமைப் பொறுப்பை சஜித் பிரேமதாசவுக்கு பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சஜித் பிரேமதாச அழைப்பை ஏற்று நாட்டைப் பொறுப்பெடுக்கவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க இன்றும் கூறுகிறார்.
ஆனால் அன்று ராஜபக்ஷர்களை முயற்சி செய்தது, நாட்டின் பொறுப்பை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்து, சஜித் பிரேமதாசவை நாசமாக்கவே ஆகும். அதுபற்றி நாங்கள் நன்றாகவே அறிந்திருந்தோம். “இந்தத் தருணத்தில் நாட்டின் தலைமைப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம்” என நாங்கள் கூறினோம்.
ராஜபக்ச குடும்பத்தின் மீதுள்ள ஊழல், மோசடிக் குற்றங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே தான் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன கட்சியையும் நாசமாக்கி விட்டார்.
பொதுஜன பெரமுன கட்சியைத் தற்பொழுது காப்பாற்றிக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ தன் மகனை ஜனாதிபதிப் போட்டியில் களமிறக்கியுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியைப் பாதுகாப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை.நாமலை களமிறக்கியது சிறந்த முடிவு.
ஜே.ஆர் ஜயவர்தன அனைத்து நீதிபதிகளையும் வீட்டிற்கு அனுப்பினார். ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை மீறிச் செயற்படுகிறார். சட்டத்தரணிகளுக்கும் நீதிமன்றங்களுக்கு இடையே சண்டையை உண்டுபண்ணவே ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபரை தேர்ந்தெடுத்தது பாதுகாப்பு அமைச்சரின் தேவையின் நிமித்தமே ஆகும். தேசபந்து தென்னக்கோனைத் தேர்ந்தெடுத்தது அரசாங்கத்தின் செயலற்ற அரசியலை கொண்டு செல்வதற்கே ஆகும். ஆனால் அவையனைத்தும் இன்று தோல்வியடைந்துள்ளன. ஆகவே ஜனாதிபதி பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
அதே போல், நாடெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடனும் ஒன்றிணைந்துள்ளனர். அதே போல் இந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு பாரியதொரு வெற்றியைப் பெற்றிகொடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றார்.