News
சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு சென்ற சுங்க திணைக்களத்துக்கு சொந்தமான கெப் வண்டி சிக்கியது
சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை துறைமுக பாதுகாப்பு பிரிவினர் இன்று (18) சுங்க திணைக்களத்துக்கு சொந்தமான கெப் வண்டியொன்றில் கைப்பற்றியதாக துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் வண்டியில் இருந்த 158 வெளிநாட்டு மதுபானப் போத்தல்களைக் கைப்பற்றியதாகவும், துறைமுக எண் 2 எல்.பி வாயிலில் இருந்து மதுபானத்தை வெளியே எடுக்க முயன்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
வாகன சாரதியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்