இந்த நாட்டில் சிறுபான்மை பெறுபான்மை என எவறும் கிடையாது..
சிங்களம் என்ற பெரிய தேசமோ அல்லது தமிழ் என்ற சிறிய தேசமோ கிடையாது என மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் இனவாதத்தை விதைத்து வடக்கு எரிகிறது என்று கூறும் கொழும்பில் ஆடம்பர வாழ்க்கை வாழும் தமிழ் அரசியல்வாதிகளின் இனவாதத் தீயில் சிக்கிக் கொள்ளக் கூடாது.
இது சிங்கள தேசமோ, தமிழ் சிறுபான்மை தேசமோ இல்லை.அனைத்து இனங்களும் ஒன்றுபட்ட மாபெரும் தேசம்.
‘சர்வ ஜன பலய’ கூட்டமைப்பின் ஆகஸ்ட் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆரம்பக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திலித் ஜயவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்.நூலகத்திற்கு தீ வைக்க தெற்கிலிருந்து வந்த அரசியல்வாதிகள் அந்த இரவு உணவை வடக்கில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகளில் சாப்பிட்டார்கள் என்பது வடபகுதி மக்களுக்கு தெரியுமா என்பது தமக்கு தெரியாது எனவும் அவர் கூறினார்.
மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபரும், சட்டத்தரணியுமான திலித் ஜயவீரவுக்கு இந்த ஆண்டு ‘நட்சத்திரம்’ சின்னத்தில் போட்டியிடும் வகையில் ஆதரவு தெரிவிக்கும் வகையில், யாழ் ரக்கா வீதி மைதானத்தில் (யாழ்ப்பாணம் பிரித்தானிய கவுன்சிலுக்கு அருகில்) பொதுக்கூட்டம் நடைபெற்றது. .