ஈஸ்டர் தாக்குதல் தற்கொலைதாரிகளின் தந்தையான ஜே வி பி உறுப்பினர் இப்ராஹிமுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது

ஈஸ்டர் தாக்குதல் தற்கொலைதாரிகளின் தந்தையான ஜே வி பி உறுப்பினர் இப்ராஹிமுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (செப்டம்பர் 06, 2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ,
போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேக நபரை நாம் கட்சியில் இருந்து நீக்கியுள்ளோம். ஈஸ்டர் தாக்குதல் தற்கொலைதாரிகளின் தந்தையான ஜே வி பி உறுப்பினர் இப்ராஹிமுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று பேஸ்புக் போட்டோக்களை காட்டி அரசு ஊடக மாநாடு நடத்துகிறது.நாம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தால் அரசாங்கள் படம் கட்டாமல் எம்மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த அரசு எதிர்க்கட்சியில் இருந்தபோதும் இதே போல போட்டோக்களை கான்பித்தி படம் காட்டினார்கள்.தங்கக் குதிரை கதை, டுபாய் மாரியட் ஹோட்டல் கதை, உகாண்டாவில் பணம் தொடர்பான கதை, ரொக்கட் கதை உள்ளிட்ட பல அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடைசியில் ஆட்சிக்கு வந்த பின்னர் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.படம் படமாகவே போய்விட்டது.
கன்டெய்னர் சம்பவம் தொடர்பாக பேசிய நாமல் ராஜபக்ஷ,
“கடந்த ஜனவரி மாதம் துறைமுகத்தில் எந்தவித பரிசோதனையும் இன்றி விடுவிக்கப்பட்ட 323 கன்டெய்னர்கள் எங்கே உள்ளன? அவற்றில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படுத்துமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த கன்டெய்னர் சம்பவத்தை மையமாக வைத்து, அரசாங்கம் உரிய முறையில் பரிசோதனைகளை மேற்கொள்ளாமல், எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களை மேற்கொள்வது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“வேதியியல் பொருட்கள் அடங்கிய கன்டெய்னர்கள் துறைமுகத்தில் பரிசோதிக்கப்படாமல் வெளியே அனுப்பப்பட்டதா? இது தொடர்பாக நியாயமான சந்தேகம் எழுகிறது,” என்று கூறிய அவர், இது குறித்து அரசாங்கத்திடம் விளக்கம் கோருவதாகவும் தெரிவித்தார்.
நுவரெலியாவில் ‘ஐஸ்’ போதைப்பொருள் உற்பத்திக்காக நிலம் வழங்கப்பட்டது எவ்வாறு என்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து வெளிப்படையாக விளக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் பாதாள உலக வெடிப்புகளை தடுக்க அரசாங்கத்தால் முடியவில்லை எனவும், அரசாங்கம் எதிர்க்கட்சியை அவதூறு செய்யவே முயற்சிக்கிறது எனவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார். “இத்தகைய நிலைமைகளை உடனடியாக மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், 323 கன்டெய்னர்கள் விடுவிக்கப்பட்டது மற்றும் அவற்றில் இருந்த பொருட்கள் குறித்து நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக விளக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு தாம் சவால் விடுப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

