News

பொதுச் சொத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு,அந்தப் பொதுச் சொத்தின் பயன்பாட்டின் நோக்கம் மற்றும் அதன் அளவை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் !

பொதுச் சொத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு, அந்தப் பொதுச் சொத்தின் பயன்பாட்டின் நோக்கம் மற்றும் அதன் அளவை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர கூறினார்.

பயன்படுத்தப்படும் நோக்கம் மற்றும் பயன்படுத்தப்படும் அளவு நியாயமானதா என்பதே அந்த குற்றச்சாட்டை தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய தொலைக்காட்சியில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்ற லக்மாலி ஜனாதிபதி அனுர திசாநாயக்க தனது தாயாரை சந்திக்க செல்ல பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

Recent Articles

Back to top button