News

இஸ்ரவேலர்களை ஊக்குவிப்பது இனவாதத்தை ஊக்குவிப்பதை விட பாரதூரமான விடயமாகும் !

இஸ்ரவேலர்களை ஊக்குவிப்பது இனவாதத்தை ஊக்குவிப்பதை விட பாரதூரமான விடயமாகும் என பேருவளை நகர சபை எதிர்க்கட்சித்தலைவர் அஸாம் பளீல் குறிப்பிட்டார்.

அருகம்பை மற்றும் வெலிகம பகுதிகளில் இடம்பெற்றுவரும்

யூத ஆக்கிரமிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட பேருவளை நகர சபை எதிர்க்கட்சித்தலைவர் அஸாம் பளீல்,

பலஸ்தீன் ஆதரவாளர்களாக இருந்து இன்று ஆட்சிக்கு வந்துள்ள என் பி பி அரசாங்கம் இஸ்ரவேலர்கள் விடயத்தில் மெத்தனப்போக்கை கடைபிடிப்பது கவலையளிக்கிறது. இன்று அருகம்பை மற்றும் வெலிகம பிரதேசங்களில் சுற்றுலா வீசாவில் வந்துள்ள இஸ்ரவேலர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் யூதர்கள் வசிக்காத இந்த நாட்டில் பல இடங்களில் சபாத் இல்லங்களை அமைத்தும் நடத்தியும் வருகின்றனர். எதிர்க்கட்சியில் இருந்த போது பலஸ்தீன் ஆதரவு தேசிய மக்கள் சக்தி இன்று ஆட்சிக்கு வந்ததும் சியோனிஸ்ட் கைப்பாவைகளாக மாறியுள்ளது.

சபாத் இல்லங்கள் சட்டவிரோதனானவை என கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் பாராளுமன்றில் கூறியபோதும் இதுவரை சடவிரோத கட்டடங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டத்தின் ஆட்சி பற்றி பேசும் அரசு இஸ்ரேல் விடயத்தில் மெத்தனப்போக்கை கடைபிடிப்பது எமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை நாம் கூறி வைக்க விரும்புகிறோம்.

Recent Articles

Back to top button