இஸ்ரேல் 1500 புதிய கட்டுமானத்துறை வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு

இஸ்ரேலின் பொது புதுப்பித்தல் துறையில் 1,500 வெற்றிடங்களுக்கு இணையம் மூலமாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, விண்ணப்பங்களை, 2025 செப்டம்பர் 14 வரை பணியகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான www.slbfe.lk மூலம் பிரத்தியேகமாக சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் கட்டுமானத் துறைக்கான ஆட்சேர்ப்பின் நான்காவது கட்டம் இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிடங்களின் அடிப்படையில், சுவர் அமைத்தல், மின்சார பொருத்துக்களை மேற்கொள்வோர், மற்றும் வீடுகளுக்கான பொருத்துக்களுக்கான தொழிலாளர்கள் கோரப்பட்டுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் 25 முதல் 45 வயதுக்குட்பட்ட இலங்கை குடிமக்களாக இருக்க வேண்டும்.
அத்துடன் அவர்கள் முன்னர் இஸ்ரேலில் பணியாற்றிருக்கக் கூடாது, குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அந்தந்த தொழில்களில் தொழில்முறை அனுபவத்துடன் சான்றளிக்கப்பட்ட திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது

