தனக்கு 10 வயது எனத் தெரிவித்து மலேசியாவின் கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும் அவரின் தாயாக நடித்த பெண்ணும் கைது.
தமக்கு 10 வயது என்று காண்பிக்கும் வகையிலான போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து மலேசியாவின் கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவியாக அவரது தாய் போன்று பாசாங்கு செய்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
பினாங்கில் உள்ள குடிவரவுத் திணைக்களத்துக்குச் சென்ற அவர்கள், போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, ஆண் நபரொருவருக்கு 10 வயது என்று கூறி கடவுச் சீட்டை பெற முயன்றுள்ளனர்.
எனினும் குறித்த நபரது உடல் தன்மையைக் கண்டு சந்தேகித்த அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில் அவர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தமையும், சம்மந்தப்பட்ட நபருக்குத் தாயாக நடிப்பதற்கு பெண்ணொருவருக்கு பணம் வழங்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவர்கள் இருவரும் அந்நாட்டின் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர் ஏலவே மலேசியக் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்திருந்த போதும், அவருக்கு மலே மொழி தெரியாத காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.