News

சில மோசடி குழுக்கள் வரிப் பணத்தை வசூலிப்பதாக முறைப்பாடுகள்

உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் எனும் போர்வையில் சில மோசடி குழுக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று வரிப் பணத்தை வசூலிப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென திணைக்களத்தின் மத்திய குழு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் வரி வகைகள் தொடர்பான வரிப்பணத்தை அரச வங்கிகளில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரில் பராமரிக்கப்படும் கணக்குகளில் மாத்திரம் வைப்பிலிடுமாறு உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் வரி செலுத்துவோரை அறிவுறுத்துகின்றனர்.

மாறாக பணம் அல்லது காசோலைகள் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை கவனத்திற்கொண்டு செயற்படுமாறும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்தகைய மோசடிக்காரர்களிடம் சிக்கியிருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

Recent Articles

Back to top button