News

உணவு,மருந்து,கல்வி உள்ளிட்டவைகளுக்கு அறவிடப்படும் வரிகளை நீக்குவோம் ; அனுர குமார திஸாநாயக

தனிப்பட்ட முறையில் ஒரு சதத்தையேனும் இலாபமாக பெற்றுக்கொள்ள நாம் போட்டியிடவில்லை என தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.

வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான ஒரு அரசை நாம் உருவாக்குவோம் என கூறியுள்ள அவர், தமது அரசில் உணவு , மருந்து , கல்வி உள்ளிட்ட சகல பொருட்களுக்கும் விதிக்கப்படும் வரி முழுமையாக நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னோக்கி கொண்டு செல்லும் கண்காணிப்பையே தமது அரசு மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.

பலான்கொடையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அப்போது எங்கிருந்து அரசு க்கு பணம் வரும் என கேட்கிறார்கள். பணம் உள்ளது.மதுபான வர்த்தகர்கள் இருவர் கோடிக்கணக்கில் வரி செலுத்தவேண்டியுள்ளது.மதுபான நிலையங்களில் நிலுவையில் உள்ள வரியை அறவிடுவோம்.நாட்டையும் நாட்டு மக்களையும் எமது நோக்கம் என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button