News
மருதானை பகுதியில் 19 வயது இளைஞன் தா*க்கியதில் 44 வயது நபர் உயிரிழப்பு
மருதானை, தேவானம்பியதிஸ்ஸ மாவத்தையில் நபர் ஒருவர் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மருதானை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் மீது வெலிமடைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் தாக்கியதில் 44 வயதுடைய குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது