News
கண்டியின் இயற்கையை ரசித்தபடி நடந்து சென்று கொண்டிருந்த பிரித்தானிய சுற்றுலா பயணியை பாம்பு தீண்டியது.
கண்டி , ரங்கல , உடிஸ்பத்துவ பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 55 வயதான பிரித்தானியப் பிரஜை பாம்பு தீண்டி காயமடைந்துள்ளார்.
விடுதியின் தோட்டத்தில் இயற்கையை இரசித்த படி நடந்து சென்று கொண்டிருக்கும் போது பாம்பு தீண்டியதில் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்