News
வெலிமடை பிரதேசத்தில் கணவனும் மனைவியும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட சோகம்.. மனைவியின் உடல் மீட்பு

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் நேற்று (17) வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, கணவன் காணாமல் போயுள்ளார்.
வெலிமடை பிரதேசத்தில் பெய்த அதிக மழை காரணமாக தம்பதியினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு முழுவதும் இருவரையும் தேடும் பணிகளில் அப் பகுதி மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் 32 வயதுடையவர். காணாமல் போனவர் 37 வயதுடையவர் ஆவார். காணாமல் போனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



