News

தன்னை நபர் ஒருவர் கட்டி அணைத்ததாக மனைவி கூறியதை கேட்டு அந்நபரை விரட்டி விரட்டி கத்*தியால் வெ*ட்டி காயங்களை ஏற்படுத்திய கணவன் கைது – மனைவி பொய் சொன்னதாக பொலி ஸாரின் விசாரணையில் பிறகு அம்பலமானது #இலங்கை

பெண் ஒருவர் கூறிய பொய்யின் காரணமாக, அவரது கணவர், நபரொருவரை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஹம்பேகமுவ காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 37 வயதுடைய நபர், தஹயியாவல – நேபபெலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்து விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு வேலைகளை செய்து வந்துள்ளார்.

வீட்டில் தங்கியிருந்த அந்த நபர் தன்னைக் கட்டியணைத்ததாக சந்தேகநபரின் மனைவி பொய்யான கூற்றொன்றை தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக ஆத்திரமடைந்த அவரது கணவர், தனது வீட்டில் தங்கியிருந்த நபரை தாக்குவதற்கு முற்பட்டபோது, குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.

தப்பியோடிய நபர், குளத்தில் குதித்து உயிரைக் காப்பாற்ற முயற்சித்தபோதிலும், சந்தேகநபரும் குளத்தில் குதித்து, கத்தியால் அவரது இடது கையில் வெட்டி காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button