News
தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஒருவரை கத்தியால் குத்திய குற்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் கைது
மினுவாங்கொடை பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஒருவர் கத்தியால் குத்தி காயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் என கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்த நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், வாளினால் அவரது ஒரு கை காயமடைந்துள்ளதாகவும் மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபரை தனது வீட்டிற்கு வந்த போது முதலில் திட்டியதாக கூறப்படும் சந்தேக நபர் சில பூந்தொட்டிகளை எடுத்து தரையில் வீசியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்