News
களு கங்கையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு
களு கங்கையில் பானை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தொடங்கொட கொஹொலான வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண்ணொருவரையே முதலை இழுத்துச் சென்றுள்ளது.
களுத்துறை கொஹொலன பிரதேசத்தில் களு கங்கைக்கு அருகில் குறித்த பெண் முதலையால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலை இழுத்துச் சென்றப் பெண்ணை படகுகள் மூலம் பிரதேச மக்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.