பாக்கிஸ்தான் பிரதமரின் உத்தரவை அடுத்து 6.5 டன் அத்தியாவசிய உபகரணங்களுடன் இலங்கையில் மனிதாபிமான மற்றும் மீட்புப் பணிகளில் செயலாற்ற களமிறங்கிய 47 பாகிஸ்தானியர்கள்.

(அஷ்ரப் ஏ சமட்)
பிரதமர் முகமது ஷெஹ்பாஸ் ஷெரீப் இலங்கையின் கடுமையான சூறாவளி பேரழிவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தேசிய அனர்த்த அதிகார சபை இலங்கைக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் உயர் தேடல் மற்றும் மீட்புக் குழுவை அனுப்பியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான புயலால் ஏற்பட்ட பெரிய அளவிலான அழிவைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் உதவி வேண்டுகோளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாக்கிஸ்தான் பிரதமர் முகமது ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அவர்களின் உத்தரவுகளின் பேரில் இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இன்று03.12.2025 அதிகாலையில் பாகிஸ்தான் தேடுதல் மற்றும் மீட்புக் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
மனிதாபிமான மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க 47 பேர் கொண்ட குழுவுடன் 6.5 டன் அத்தியாவசிய உபகரணங்களுடன் பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் வந்தடைந்தது.
நிவாரணப் பொருட்கள் புறப்படும் நிகழ்வில் மத்திய அமைச்சர் டாக்டர் தாரிக் ஃபசல் சவுத்ரி, NDMA தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இனாம் ஹைதர் மாலிக், HI (M),
மற்றும் இலங்கை உயர் ஸ்தாணிகர் ரியர் அட்மிரல் பிரெட் செனவிரத்ன (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.



